சீன இராணுவ சீருடை விவகாரம்; குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

சீன இராணுவம் அணியும் சீருடை அணிந்த சீன நாட்டவர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முற்றாக நிராகரித்தார்.

இது தொடர்பில சி.ஜ.டியும் இராணுவத்தினரும் விசாரணை நடத்தியுள்ளதோடு அந்த சீன நிறுவன சீருடையே அவர்கள் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, தனியார் பாதுகாப்பு பிரிவினரும் இதனை ஒத்த ஆடை அணிகின்றனர். இது சீன இராணுவம் அணியும் ஆடையல்ல. கராஜுகளில் கூட இவ்வாறான ஆடை அணிகின்றனர்.

எவருக்கும் நீதிமன்றம் செல்ல முடியும். தொல்பொருள் சட்டம் மீறப்பட்டிருந்தால் கட்சிகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் செல்லலாம். கடற்படை உடையை ஒத்த ஆடையே அவர்கள் அணிந்திருந்தனர்.பின்னடைவை சந்தித்துள்ள குழுக்கள் இதனை பயன்படுத்தி இதனை பெரிதுபடுத்துகின்றனர்.அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர்களின் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் ஆடை என அவர்கள் அறிவித்துள்ளனர்.இவ்வாறான பல நிறுவனங்கள் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனமாக இருந்தால் அனுமதி பெற்று இவ்வாறான ஆடை அணிய முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/30/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை