சமூக ஊடக வதந்திகளுக்கு கெஹலிய முற்றுப்புள்ளி

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான தகவலென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ அடுத்தாண்டு அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்குள் எப்போது வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கப்படுவாரென சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் ‘அரசியல் வாசகங்கள்’ என கூறினார்.

தற்போது பரவி வரும் கதைகளை நீங்கள் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவதை நீங்கள் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சமூக ஊடகங்களின் கூற்றுக்களை பொறுப்பான ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாதென்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர்களிடம் கூறினார். இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படாவிட்டால் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும் அவர் மேலும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை