தடுப்பூசி ஏற்றலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசித் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கைக்கு அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதே நேரம் தடுப்பூசி வழங்கும் முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் இரண்டாமிடம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மூன்றாவதாகவும், அரச அதிகாரிகள் நான்காவதாகவும் தடுப்பூசி முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்று ஏற்படும் தீவிர அபாயமுள்ள பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலுள்ளஆடைத்தொழிற்சாலைகள் உட்பட தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமைப் பட்டியலிலுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 முதல் 60 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது” என்றார்.

 

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை