ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி முதல் டோஸ் மட்டும் போதுமானது

தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் முதல் டோஸ் மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை முதல் டோஸ் மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என்று தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதில் திருப்தியடைய முடியும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் இரண்டு தடுப்பூசிகளில் முதலாம் கட்டமாக வழங்கப்படும் தடுப்பூசியை ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற பெயரில் விநியோகித்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கக் கூடும்.

இது தொடர்பில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தினால் எமக்கு அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. எனவே இது எம்மால் தீர்மானிக்கப்படும் விடயமல்ல. தயாரிப்பு நிறுவனமும், ஆய்வுகூடங்களுமே அவற்றை தீர்மானிக்கும் என்றார்.

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை