அரசின் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல்

கடந்த வருடம் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையில் பகிர்வு  ஒருவருக்கு மேலதிகமாக 2,000 ரூபாவே வழங்கப்படவிருக்கிறது.வேறு வகையில் சொல்வதாக இருந்தால் தொடர்ந்து வழங்கப்படும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டு அதனை விட கூடுதலாக வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.இரண்டு கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.

பயணக் தடையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்தது. இதன் முற்கட்டமாக இன்று முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

அத்துடன், அரசால் வழங்கப்படும் 5,000க்கும் குறைவான கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு, தற்போது அவர்கள் பெறும் தொகையுடன் 5,000 ஈடுசெய்யும் வகையில் எஞ்சிய தொகை வழங்கப்படும். அதேபோல் பயணக்கட்டுப்பாட்டால் வருமானத்தை இழந்தவர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. அது தொடர்பான பெயர் பட்டியலின் அடிப்படையில் கொடுப்பனவு பகிரப்படவிருக்கிறது என்றும் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார்..

 

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை