மரணதண்டனை கைதிகள் தொடர்ந்தும் போராட்டம்

வெலிக்கடை, மஹர மற்றும் பூஸா சிறைகளில் மரண தண்டனைக் கைதிகள் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஒரு கட்டடத்தின் மீது ஏறி 10 கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்து  வருவதாகவும், மேலும் 150 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளரென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறையில் 70 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு கைதி பூஸா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் பொது மன்னிப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்களென நேற்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை