எனக்கு அமைச்சு பதவியா? மைத்திரி மறுப்பு தெரிவிப்பு

கோரவுமில்லை; எதிர்பார்க்கவுமில்லை

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கும் ஊடக அறிக்கை முற்றிலும் போலியானது என அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவி அல்லது ஏதேனும் பொறுப்பை வழங்குமாறு தாம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை எனவும் பதவிகளை ஏற்பதற்கான எவ்வித எதிர்பார்ப்பும் தனக்கு இல்லை எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை