கொழும்பில் மேலும் 5 தடுப்பூசி நிலையங்கள்

அமைச்சர் நாமல் ஏற்பாடு

கொழும்பு நகரப்பகுதிக்குள் ஐந்து தடுப்பூசி நிலையங்களை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் நாமல்

ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

இன்னமும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களிற்காக இந் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி குறித்து மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.தேவையான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வெளிநாடுகள் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.தடுப்பூசி நிலையங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை