மட்டு. மாவட்டத்தில் 25,000 தடுப்பூசிகள் இன்று முதல் வழங்க ஏற்பாடு

 

மட்டு.மாவட்டத்திற்கு 25,000 தடுப்பூசிகள் வர இருக்கின்றன. இந்த தடுப்பூசிகளை ஆறு பிரிவுகளாக வழங்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்  கொண்டதிற்கு அமைய நடவடிக்கைகளை எமது பிராந்திய சுகாதார பணிப்பாளர் முன்னெடுத்து வருகின்றார் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 37 பேர் மரணங்களும் மூன்றாவது அலையில் 2200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவற்றில் 963 பேர் வைத்தியசாலைகளில் சிசிச்சை பெற்று வருகிறார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது என்று நேற்று (07) இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

 

 

வெல்லாவெளி தினகரன், கல்லடி குறூப் நிருபர்கள்

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை