பயணத்தடையை நீடிப்பதா? இதுவரை இறுதி முடிவில்லை

இராணுவத் தளபதி சவேந்திர தெரிவிப்பு

தற்பொழுது நடைமுறையிலிருக்கும் பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத்  தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (07) காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் நேற்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவையேற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

 

 

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை