சமூகவலைத் தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு

குற்றமிழைப்போர் உடன் கைதாவர்

 

இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரைத் தேடி விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றத்தடுப்பு திணைக்களத்தின் கணனி பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழு ஒன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மாஅதிபர்,

இக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொய் பிரசாரங்கள் மூலம் மக்களை பல்வேறு வழிகளில் அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளமை தெரிய வருவதாகவும் அதனால் மக்களது அன்றாட செயற்பாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பொய் பிரசாரங்களினால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்ற கூற்றுக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அதுபோன்ற செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவராவது நபர் பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பகரமான சூழ்நிலைக்கு உட்படுத்துவாரானால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98வது சரத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை