தடுப்பூசி ஒவ்வாமையால் 25 பேர் ஆஸ்பத்திரியில்

கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்ட சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 25 பேருக்கு மேல் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை வடக்கில் தடுப்பூசி பெற்றவர்களில் ஒவ்வாமையென அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை