செங்கலடியில் இராணுவ வண்டி மோதி விபத்து: இருவர் ஸ்தலத்தில் பலி; நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியைவிட்டு விலகி நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணு வீரர்கள் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(24) இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி-பதுளை வீதியில் கறுத்தப்பாலத்தில் செங்கலடி பகுதியை நோக்கி சென்ற இராணுவ டிரக்வண்டி நேற்று பிற்பகல் 4 மணியளவில் விபத்துக்குள்ளானது. கறுப்பு பாலம் அருகில் சென்றுகொண்டிருந்த டிரக்வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு கீழ் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

 

Sat, 06/26/2021 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை