24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 27 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் அதில் 12 பேர் பலியாகியுள்ளதாக மேற்படி தலைமையகம் தெரிவித்துள்ளது.

வீதி விபத்துக்களினால் 24 மணித்தியாலத்தில் 12 பேர் நாட்டில் பலியாகின்றனர் என்பது பாரதூரமான நிலைமை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேவேளை எட்டு நபர்கள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள வீதி விபத்துக்களில் மரணம் அடைந்துள்ள நிலையில் ஏனையோர் அதற்கு முன்தினம் இடம்பெற்றுள்ள வீதி விபத்துக்களில் காயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலியானவர்களில் எட்டு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 3 சைக்கிள் ஓட்டுனர்கள், முச்சக்கர வண்டி சாரதிகளும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை