விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

டுவிட்டரில் விளையாட்டுத்துறை அமைச்சர்

விதிமுறைகளை மீறும் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளிப்பதற்காக நேரத்தையும் வாய்ப்பையும் இளைஞர்கள் மத்தியில் முதலீடு செய்ய முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் போதிய நோக்கமின்மையையும்  ஒழுக்கமின்மையும் சகித்துக்கொள்ளக் கூடாதென நாமல் ராஜபக்‌ஷதெரிவித்துள்ளார்.

இந்தவிதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Wed, 06/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை