18 இலட்சத்து 34 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ்

இலங்கையில் இதுவரையில் 18 இலட்சத்து 34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன்,  3 இலட்சத்து 50 ஆயிரத்து 163 பேருக்கு 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், 8 இலட்சத்து 46 ஆயிரத்து 583 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 62 ஆயிரத்து 703 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டுக்குத் தேவையான மேலும் 34 இலட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை