பொதுப் போக்குவரத்து பயன்பாடு; மட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

நேற்று முதல் நடைமுறை- -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண

*பஸ்களில் ஆசன அளவிற்கே பயணிகள்

*ஆட்டோக்களில் 2 பேர் மாத்திரம்

பொதுப் போக்குவரத்துக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான விசேட  செயற்திட்டமொன்று நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதனை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறைக்கிணங்க பொதுப்போக்குரத்து பஸ்களில் ஆசனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் அத்துடன் வாடகை முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி செயற்திட்டம் தொடர்பாக பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வரென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

- லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை