யாழில் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி

- யாழ். மாவட்ட அரச அதிபர்

யாழில் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார் .

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சர்  சமல் ராஜபக்சவிடம் யாழ் மாவட்ட செயலகம் மற்றும்   பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் சுகாதார அமைச்சு  மற்றும்  உள்நாட்டு  அமைச்சுக்கு   அனுப்பப்பட்டிருந்தது.

எனவே  உள்நாட்டு அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ள  மாவட்ட செயலகம் உட்பட அனைத்து  பிரதேச செயலகங்கள் மற்றும் அனைத்து திணைக்களங்களிலும் கடமை புரிகின்ற அரச  உத்தியோகத்தர்களுடைய எண்ணிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கோரி  பெற்றிருக்கின்றார்கள்.

அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3200   அரச பணியாளர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என எம்மால்  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உள்ளூராட்சி அமைச்சு, உள்ளுராட்சி மன்றங்களில்  பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான விபரங்களை  பெற்றுள்ளார்கள். 

எனவே   இந்த அரச பணிகளில் ஈடுபடும் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மிக விரைவில்  தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரச அதிபர் தெரிவித்தார். 

Thu, 05/27/2021 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை