அரச மருத்துவமனைகளில் உரிய சேவை கிடைக்காவிட்டால் உடன் அறிவிக்கவும்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காத பட்சத்தில் அது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கேட்டு கொண்டுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலருக்கு சில பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உரிய சுகாதார சேவைகள் கிடைக்காத நோயாளிகள் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸ் சிகிச்சை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு போதுமான அளவு மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் தேவைப்படும் மருந்துகள், உபகரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்   
 

Mon, 05/24/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை