பாகிஸ்தான் மத நிந்தனைச் சட்டம்: ஐரோப்பிய பாராளுமன்றம் அழுத்தம்

மோசமான மனித உரிமை பதிவுகள், மத சகிப்பின்மை மற்றும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகத்தின் மீதான புறக்கணிப்பு தொடர்பில் பாகிஸ்தான் மீது சர்வதேச அளவில் கண்டனம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் மத வெறுப்பு மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான ஒருக்குமுறைக்கு எதிராக குரல் கெடுக்கும் அமைப்புகள் மற்றும் நாடுகள் பட்டியலில் ஐரோப்பாவின் அதிகாரம் மிக்க அமைப்பான ஐரோப்பிய பாராளுமன்றமும் இணைந்துள்ளது.

இந்த நிலை பாகிஸ்தானில் தொடர்ந்து நீடிப்பதோடு இம்ரான் கான் பிரதமரான பின் அது மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் மத நிந்தனை சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறைகளை தடுப்பதில் தோல்வி கண்டிருப்பது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பிய பாராளுமன்றம் கடந்த ஏப்ரலில் பாகிஸ்தானுக்கான வர்த்தக சலுகையை முடிவுக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/24/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை