அத்தியாவசிய தேவைகளுக்காக நாளை விசேட ரயில் சேவைகள்

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்படுவதுடன் சில ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பேபுஸ்ஸவிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்குமான 03 ரயில் சேவைகள், கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரைக்குமான 03 ரயில் சேவைகளும் அளுத்கமையில் இருந்து மருதானை வரைக்குமான ரயில் சேவையும் கண்டியிலிருந்து பொல்காவலை வரைக்குமான ரயில் சேவையும் நடைபெறும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இரண்டு ரயில் சேவைகளும் கொழும்பு கோட்டையிலிருந்து கொச்சிக்கடைக்கு இரண்டு ரயில் சேவைகளும் நடைபெறவுள்ளதாகவும் அத்துடன் அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்குமான ரயில் சேவையும் கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை வரையிலான ரயில் சேவையும் நடைபெறுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை தெற்கில் பெலியத்தவிலிருந்து இந்துறுவ வரையிலான ரயில் சேவையும் இந்துறுவையிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவையும் நடைபெறவுள்ளதாகவும் ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்     

Mon, 05/24/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை