துருக்கி துணை படையுடன் பாகிஸ்தான் விமானப் படை கூட்டு

சிரிய இராணுவக் குழுகக்களுடனும் துருக்கி இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்ற துருக்கி துணைப்படையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட பாகிஸ்தான் விமானப் படை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப் படையின் வான்பரப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான நிலையம் துருக்கியின் இஸ்லாமிய யூனியன் கொங்கிரசுடன் இணைந்து செயற்படவே இணங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படை துருக்கி ஜனாதிபதிக்கு விசுவாசமானது என்று நம்பப்படுகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் துருக்கி விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் விமானப்படை தளபதி மார்சல் முஜாஹித் அன்வர், ‘பாகிஸ்தான் மற்றும் துருக்கி என்பது இரு நாடுகளாக இருந்தபோதும் ஒரு தேசம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Fri, 05/28/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை