தேசிய பாதுகாப்பு தொடர்பில் வீண் அச்சம் தேவையில்லை

- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேசிய பாதுகாப்பு பலமிக்கதாக கட்டியெழுப்ப பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.   நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் ஏற்படலாம் என பரப்பப்படும் பிரசாரங்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ள அவர், அத்தகைய தகவல்கள் அடிப்படையற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை அது தொடர்பில் வெளியிட்டுள்ள அவர், மக்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கலக்கமடைய வேண்டிய அவசியம் கிடையாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய ராஜ்யத்தின் மூலம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள நான்காவது மட்ட சுற்றுலா மட்டுப்படுத்தல் சம்பந்தமான வெளியீட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை இயல்பானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டங்கள், தொடர்பில் செயற்படும் அனைத்து நிறுவனங்களும் தேசிய பாதுகாப்பை மிக பலமானதாக ஸ்தாபித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 05/28/2021 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை