ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் வெளிநாட்டமைச்சருடன் சந்திப்பு

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவை (06) வெளிநாட்டமைச்சில் வைத்து சந்தித்தார்.

ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ், மால்டோவா, உஸ்பெகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையேயான பரஸ்பர பொருளாதார, சமூக, கலாசார மற்றும் கல்வி ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கான உத்திகள் குறித்து அமைச்சர் குணவர்த்தன தூதுவரின் கவனத்தை ஈர்த்தார்.

கொவிட்-19 தொற்றுநோயால் முடங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரத்தைப்
புதுப்பிப்பதற்காக முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையைப் பிரதிநிதித் துவப்படுத்தும் அனைத்து தூதுவர்களும் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் இணக்கமாகவும் ஒத்துழைப்புடனும் பணியாற்ற வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, ரஷ்யா உட்பட பல நாடுகள் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இலங்கையில் பல அபிவிருத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Mon, 05/10/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை