பாராளுமன்ற பொலிஸ் பாதுகாப்பில் மாற்றம்

பாராளுமன்ற பொலிஸ் பிரிவு, விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொலிஸ் பிரிவானது இதுவரை மேல்மாகாண தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இருந்தது.

சில சில நபர்கள்மற்றும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவுகள் பிரிவு நிர்வாகம் மற்றும் மேற்பார்வை என்பவற்றை தனி பொலிஸ் பிரிவின் கீழ் செயல்படுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பாதுகாப்பு பிரிவும் மஹிந்த குணரத்னாவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

புதிய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பொலிஸின் மேலும் பல பிரிவுகள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

கோவிட் அபாயத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

Mon, 05/10/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை