பணம் கொடுத்து போலியான தடுப்பூசியை பெற வேண்டாம்

அரச ஔடத கூட்டுத்தாபனம் மக்களிடம் கோரிக்கை

பொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என  தெரிவித்துள்ளது.இதுவரை பணம் செலுத்தி தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் முறை நடைமுறையில் இல்லை. எனவே போலியான மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் கொவிட்-19 தடுப்பூசிகள் முற்றிலும் இலவசமாகவே ஏற்றப்படுவதுடன், எந்தவித கட்டணமும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.நாட்டில் கொவிட் தொற்று அதிகமாக பரவியுள்ள பகுதிகளை இனங்கண்டு மாவட்ட ரீதியாக தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.எனவே தடுப்பூசி குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Mon, 05/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை