சட்டவிரோத பணப்பரிமாற்றம் எனும் பேச்சுக்கே இடமில்லை

ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீ.எல்

துறைமுக நகரத்தினூடாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவாறான தொரு செயற்பாடு இடம்பெற மாட்டதென அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும்

விசேட ஊடக மாநாடு (29) ‘The Colombo Port City, Angel or Devil’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அங்கு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு துறைமுக நகரம் பயன்படுத்தப்படும் என குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் நாட்டின் அனைத்து சட்டங்களும் இங்கு செயற்படுத்தப்படுவதால் அவ்வாறு நடக்காது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் துறைமுக நகரில் முழுமையாக செயற்படுத்தப்படும். பொலிஸ், இராணுவம் என்பவற்றுக்கு இங்கு செயற்பட முடியாதென்ற குற்றச்சாட்டிலும் உண்மை கிடையாது. எமது நாட்டின் ஒரு அங்கமாகவே துறைமுக நகரம் உள்ளது. கடந்த ஆட்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கொண்டுவந்த வர்த்தமானி அறிவிப்பில் துறைமுக நகரின் முழு பிரதேசமும் கொழும்பு நிர்வாக நகரின் பகுதியாக இணைத்து அறிவிக்கப்பட்டது.நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் பிரதானமானது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

 

 

Mon, 05/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை