உலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு

உலக நாடுகளில் பதிவாகும் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து இரு மடங்காகியுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக, நாளொன்றில் பதிவாகும் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 800,000 ஐத் தாண்டியுள்ளதாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜனவரியில் சற்று குறைந்திருந்த புதிய தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியா, தென் அமெரிக்க வட்டாரம், ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்றுச் சம்பவங்களால் சர்வதேச அளவில் எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் புதிதாகக் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 

இந்தியாவின் நோய்த்தொற்று சம்பவங்கள் சர்வதேச அளவில் 40 வீதமாக உள்ளது. அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தினசரி உயிரிழப்பு 3,000 ஐ தாண்டி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

சராசரி மக்கள்தொகை அடிப்படையில் உலகில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் உள்ள நாடாக உருகுவே காணப்படுகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையை மாத்திரமே கொண்ட அந்த நாட்டில் நாளுக்கு சராசரியாக 3,000 தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. குறிப்பாக தென் அமெரிக்க பிராந்தியத்தின் உருகுவே, பராகுவே, பிரேசில், பெரு, ஆர்ஜன்டீனா மற்றும் கொலம்பியா ஆகிய அனைத்து நாடுகளும் சனத்தொகை அடிப்படையில் அதிக உயிரிழப்பு பதிவான 20 நாடுகளுக்குள் அடங்குகின்றன.

 

Mon, 05/03/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை