பயங்கரவாதத்தை தோற்கடித்தமை நாடு பெற்ற பெரு வெற்றியாகும்

- அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு முகங்கொடுக்க நேர்ந்த மிக மோசமான பேரழிவு எல்.ரி.ரி.ஈ யின் பயங்கரவாதமே என்றும் அதனை தோல்வியுறச் செய்தமை நாட்டின் எதிர்கால பரம்பரைக்கு பெற்றுக்கொடுத்துள்ள பெரும் வெற்றியெனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

33 வருடங்கள் நாடும் நாட்டு மக்களும் இருளான யுகத்தையே கழிக்க ​நேரிட்டது. அதனை முடிவுக்குக் கொண்டுவந்து அனைத்து நாட்டு மக்களையும் சுதந்திரமடையச் செய்தமை நாட்டின் ஒரு வெற்றி தினமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தோல்வியுறச் செய்யப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், பிரபாகரனின் மிலேச்சதனமான பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது என உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்திருந்த நிலையில், பெரும் பலத்துடன்
பின்னடைவின்றி தூரதரிசனத்துடன் நாட்டின் தலைவரும் முப்படையினரும் தமது அர்ப்பணிப்பின் மூலம் அதனை தோற்கடித்து நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wed, 05/19/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை