ஜனநாயக இடதுசாரி முன்னணியின் "சுபீட்சத்தின் நோக்கு" ஜனாதிபதியிடம்

"சுபீட்சத்தின் நோக்கு" நிகழ்ச்சித்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்காக ஜனநாயக இடதுசாரி முன்னணி தயாரித்த "சுபீட்சத்தின் நோக்கு" மக்கள் மைய பிரகடனம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த பிரகடனத்தை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியிடம் வழங்கினார்.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல், நட்புறவுடனான அணிசேரா வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், ஊழல் மற்றும் மோசடிகள் இல்லாத தூய்மையான அரச நிர்வாகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவை "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்களாகும். இப்பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் குறித்து கிராமிய மக்களுக்கு அறிவூட்டுவதற்காக அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களை அணிதிரட்டுவதற்காக 100 கருத்தரங்குகளை நடத்த ஜனநாயக இடதுசாரி முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவனந்தனவும் கலந்துகொண்டார்.

Sat, 05/08/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை