சட்டபூர்வ ஆவணம் வழங்குமாறு கவனயீர்ப்பு

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று- சவுக்கடி கரையோரப் பிரதேசத்தில் அரசாங்க காணிகளில் குடியமர்ந்தவர்கள் தமக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி வியாழக்கிழமை (06) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க காணிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காடுவெட்டி குடிசையமைத்து 24 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்கள் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் கோரி பல தடவை விண்ணப்பம் செய்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம் கருத்துத் தெரிவிக்கையில், குடியிருப்பதற்கு காணியற்றவர்கள் நீண்டகாலமாக அரசாங்க காணிகளில் வீடமைத்து குடியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஏறாவூர் நிருபர்

Sat, 05/08/2021 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை