இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நீண்ட காலப் பதவிக்கு நெருக்கடி

இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யெயிர் லெபிட் புதிய கூட்டணி அரசு ஒன்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்து சாதனை படைத்துள்ள பென்ஜமின் நெதன்யாகு தனது பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ஆட்சியை தீர்மானிப்பவராகக் கூறப்படும் பாராளுமன்றத்தில் ஆறு ஆசனங்களை பெற்றிருக்கும் தீவிர வலதுசாரி யெமினா கட்சி தலைவர் நப்டாலி பென்னட்டுடன், லெபிட் கூட்டணி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது பற்றி லெபிட் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு தடவை பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சிக்கும் பொரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட 28 நாள் அவகாசத்திலேயே அவரால் அரசு ஒன்றை அமைக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இஸ்ரேல் பிரதமராக 71 வயதான நெதன்யாகு இருந்து வருகிறார்.

Mon, 05/31/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை