இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை விதிப்பு

எவருக்கும் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிரடி முடிவு

இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனவே இந்தியாவிலிருந்து வருகைதரும் எந்தவொரு பயணிக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை கடந்த சில வாரங்களாக அதிவேகமாக மக்களிடேயே பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை