அலரி மாளிகையில் எளிமையாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று முன்தினம் (05) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது. முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத் தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை விசேட அம்சமாகும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம். ஹரிஸ், எஸ்.எம்.எம். முஷாரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ். நவ்ஃபீக், இஷாக் ரஹுமான், பைசல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Fri, 05/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை