கொரோனா வைரஸ்: கர்ப்பிணித் தாய்மார்கள் 70 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை

நாடளாவிய ரீதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 70 கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இம்முறை அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒரு மாதத்திற்கும் 6 மாதத்திற்கும் இடைப்பட்ட குழந்தைகளும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தளவு பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/04/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை