பங்களாதேஷ் படகு விபத்து; 26 பேர் பலி

பங்களாதேஷில் பயணிகளை நிரப்பிய விசைப்படகு ஒன்று மணலை எடுத்துச் செல்லும் படகில் மோதிய விபத்தில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மாவா சிறு நகரில் இருந்து வந்த விசைப் படகில் மூன்று டஜன் பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பத்மா நதியின் சிபச்சர் நகரில் இருக்கும் பிரதான நதித் தரிப்படம் ஒன்றுக்கு அருகிலேயே மற்றைய படகுடன் அது மோதியுள்ளது.

‘பெண் ஒருவர் உட்பட 26 பேரின் உடல்களை நாம் மீட்டுள்ளோம். மூன்று சிறுவர்கள் உட்பட ஐவரை காப்பாற்றினோம்’ என்று பொலிஸ் அதிகாரியான ஆமிர் ஹொசைன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

விசைப்படகு மோதியபோது அதன் முன் பக்கம் சேதமடைந்து சில நிமிடங்கிலேயே மூழ்கி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவ மீட்புக் குழு தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆமிர் ஹொசைன் மேலும் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மத்திய நகரான நரயங்கஜில் கொரோனா தொற்றுக்கு எதிராக முடக்கநிலைக்கு முன்னர் அவசரமாக தமது வீடுகளுக்கு செல்வதற்காக 50 பயணிகளை ஏற்றியபடி சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

Tue, 05/04/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை