கொவிட்-19: வெளிப்படையான விசாரணைக்கு அமெ. அழைப்பு

கொவிட்-19 பூர்வீகம் பற்றிய அடுத்த கட்ட விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள அமெரிக்க சுகாதார செயலாளர் ஷவீர் பெசரா உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் அமைச்சர் மட்டக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா தொற்றின் மூலத்தை மதிப்பீடு செய்ய சர்வதேச நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடுகங்கள் அண்மைக் காலத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சீனாவின் மத்திய ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரிலேயே 2019 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அது தொடக்கம் உலகெங்கும் 167 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்களும் 3.4 மில்லியன் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

சீன விஞ்ஞானிகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இந்த நோய்த் தொற்று ஆய்வு கூடம் ஒன்றில் தோன்றி இருப்பதற்கான வாய்ப்பு மிகச் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது என்று கூறப்பட்டது. இது பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாகவும் கூறப்பட்டது.

எனினும் இந்த புதிய நோய்த் தொற்று சமூகத்தில் இருந்து கண்டு பிடிக்க சில வாரங்களுக்கு முன்னர் 2019 நவம்பர் மாதத்தில் சீன நச்சுயிரியல் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்திக்கு கடுமையான மறுப்பை வெளியிட்ட சீனா, அமெரிக்க ஆய்வு கூடத்தில் இருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்ற தொடர்ச்சியான தனது கூற்றை வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உலக சுகாதார அமைப்பில் உரையாற்றிய சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான செயலாளர் ஷவீர் பெசரா, சீனாவின் பெயரை குறிப்பிட்டு கூறாதபோதும், எந்த ஒரு அடுத்த கட்ட விசாரணையும் மேலும் கடிமானதாக இருக்கும் என்று அமெரிக்க எதிர்பார்க்கிறது என்றார்.

Thu, 05/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை