இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை

அமெரிக்க பயண எச்சரிக்கை குறித்து அரசு அறிக்கை

இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 04 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துக் கொள்வதாக அதன் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 05/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை