இரத்தினபுரி மாவட்டத்தில் பசுக்களுக்கு வைரஸ் தொற்று

- பசும் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்

இரத்தினபுரி மாவட்டத்தில் பசுக்களுக்கு ஏற்படும் லம்சி ஸ்கின் எனும் சரும நோய் பரவி வருகின்றது. இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் பசும் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  மாவட்ட கால்நடை அபிவிருத்தி காரியாலய உதவி அத்தியட்சகர்  டபிள்யூ.டபிள்யூ.சீ.குலரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோதாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலே அவர் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 61பதிவு செய்யப்பட்ட பண்ணைகளில் காணப்பட்ட 128பசுக்களில் 61பசுக்கள் குணமடைந்துள்ளன. அத்துடன் 2020ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20824பசுக்கள் மற்றும் 9865எருமைகள் காணப்பட்டன.இவற்றிலிருந்து 26,61,530லீற்றர் பசும்பாலும் 10,7,24,762எருமைப் பால் எடுக்கப்பட்டுள்ளன.

மாடொன்றில் இருந்து இன்னொரு மாட்டிற்கு இந்த வைரஸ் தொற்றக் கூடியது.

எனவே வைரஸ் தொற்றிய மாட்டினை ஏனைய மாடுகளிலிருந்து வேறுபடுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 04/27/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை