பிரேசிலில் கொரோனாவுடன் அரசியல் பதற்றமும் தீவிரம்

பிரேசிலில் தினசரி கொரோனா உயிரிழப்பு அதிகரித்து நாட்டின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் பதவி விலகிய நிலையில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார்.

பொல்சொனாரோ இராணுவத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சித்த நிலையிலேயே முன்னெப்போதும் இல்லாதவகையில் பாதுகாப்பு தளபதிகள் பதவி விலகியுள்ளனர்.

கொரோனா தொற்றை கையாள்வதில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் பொல்சொனாரோவின் புகழ் சரிந்துள்ளது.

கடந்த செவ்வாயன்று கொரோனா தொற்றினால் சாதனை எண்ணிக்கையாக 3,780 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 314,000 ஐ நெருங்கியுள்ளது.

அந்நாட்டில் மொத்தம் நோய்த் தொற்று சம்பவம் 12.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்ற தீவிர வலதுசாரி ஜனாதிபதியான பொல்சொனாரோ கொரோனா தொற்றுக்கு எதிரான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறார். அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறுகிறார்.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் நான்கு முறை சுகாதார அமைச்சரை மாற்றிய பொல்சொனாரோ கடந்த திங்களன்று அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவந்தார்.

Thu, 04/01/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை