தாய்வானுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை; அமெரிக்கா அக்கறை

தாய்வானுக்கு எதிராக சீனா மேற்கொண்டுவரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அக்கறை கொண்டிருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ட்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

மேற்கு பசிபிக் வட்டாரத்தில், வன்முறையைப் பயன்படுத்தி, நிலைத்தன்மையைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எவ்வித முயற்சியும் கடுமையானதாகக் கருதப்படும் என அவர் எச்சரித்தார்.

அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று தாய்வானுக்கு அருகே அண்மையில் சென்றதைத் தொடர்ந்து, பதற்றநிலை அதிகரிப்பதற்கு அமெரிக்காவே காரணம் என்று சீனா சாடியது.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இவ்வாறு கருத்துக் கூறினார்.

தாய்வான் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ளதாக பிளிங்கன் கூறினார்.

அத்துடன், மேற்கு பசிபிக் வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் கட்டிக்காப்பதற்கு அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“வலுக்கட்டாயமாக தற்போதுள்ள அந்தஸ்தை யாரேனும் மாற்ற முயற்சிப்பது மோசமான ஒரு தவறாக இருக்கும்” என்று பிளிங்கன் இதன்போது தெரிவித்தார்.

தாய்வானை பிரிந்து சென்ற ஒரு பகுதியாகக் கருதும் சீனா அதனை தனது ஆட்புலத்திற்குள் சேர்க்க இராணுவத்தை பயன்படுத்தும் வாய்ப்புப் பற்றியும் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/13/2021 - 18:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை