Header Ads

9 ஆண்டுகளாக வீட்டில் இருந்த சடலம்; பொலிஸார் விசாரணை

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 9 ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆடவரின் சடலம் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த ஆடவரது பராமரிப்பாளரால் அந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் கூறினர்.

60 வயதுக்கு மேற்பட்ட அந்த ஆடவருக்கு, ஒரு முறைக்கு மேலாகத் திருமணமாகியுள்ளது என்றும் பிள்ளைகள் இருப்பதாகவும் ‘தி கார்டியன்’ பத்திரிகை தெரிவித்தது.

பராமரிப்புப் பணிக்காக வீட்டைத் திறந்துவிடுமாறு அந்தப் பராமரிப்பாளர் காவல் அதிகாரிகளைக் கேட்டார். அப்போதுதான், அந்த ஆடவர் இறந்தது தெரியவந்தது.

அவர் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்ததாய் நம்புவதாகக் பொலிஸார் குறிப்பிட்டனர். வீட்டில் பிரிக்கப்படாமல் கிடந்த கடிதம், பால் பெட்டிஆகியவற்றின் மூலம் அவ்வாறு ஊகிக்கப்படுகிறது. அவர் இயற்கையான காரணங்களால் மாண்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக தி கார்டியன் குறிப்பிட்டது.

அவர் அதிகம் பேசுபவர் கிடையாது என்பதால், அவர் வேறு இடத்திற்கு மாறிச் சென்றுவிட்டதாய் நினைத்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். அவருடைய மாதாந்திரக் கட்டணங்கள், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து தொடர்ந்து தானாகவே செலுத்தப்பட்டு வந்தன.

ஒன்பது ஆண்டுகளாக ஒருவரை, யாருமே தேடாமல் இருந்தது எப்படி என்று பொலிஸார் வியப்புத் தெரிவித்தனர்.

30 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று, பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கருத்துக் கூறியுள்ளார். நேரடித் தொடர்பு இல்லாத மின்னிலக்கச் சேவைகளுக்கு, உலகம் கொடுக்கும் விலை இதுவென்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு புதிய தொழில்நுட்ப வசதியும், அந்த ஆடவரின் மரணத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

Wed, 04/14/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.