உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரும் தேவாலயங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு

- பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடத்தப்படும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.  

2019ஆம் ஆண்டு 3தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களில் 269பேர் பலியானதுடன் சுமார் 500பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

இத்தாக்குதல்களின் 2ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையாகும்.  

இதனை முன்னிட்டு, சமய பூஜைகள், மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இதனால், நிலைமையை கண்காணிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்                  மாஅதிபர்கள், பொலிஸ் மாஅதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. பிரதேசத்திலுள்ள அருட்தந்தையர்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்களுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து கலந்துரையாடுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/20/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை