உலகில் அதிக செல்வந்தர்கள் உள்ள நகராக பீஜிங் மாற்றம்

உலகிலேயே மிக அதிகமான பெருஞ்செல்வந்தர்களைக் கொண்ட நகரம் சீனாவின் தலைநகர் பீஜிங் என்று போர்பஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், அந்தப் பட்டியலில் அந்நகரைச் சேர்ந்த மேலும் 33 பேர் சேர்ந்தனர். தற்போது, பீஜிங்கில் 100 பெருஞ்செல்வந்தர்கள் உள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனம் கூறியது.

அதற்கு அடுத்த நிலையில், 99 பேருடன் நியூயோர்க் நகரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக, நியூயோர்க் நகரமே முதல் இடத்தில் இருந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, பங்குச் சந்தை ஆகியவை அது முதல் இடத்தைப் பெற உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நியூயோர்க் நகரிலுள்ள செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு பீஜிங்கில் உள்ள செல்வந்தர்களின் மதிப்பைவிட 80 பில்லியன் டொலர் அதிகம்.

சீனாவில் மொத்தம் 698 பெரும்பணக்காரர்கள் உள்ளனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 724ஆக உள்ளது. 3ஆம் நிலையில், 140 பேருடன் இந்தியா உள்ளது.

கடந்த ஆண்டு, உலகளவில் மேலும் 493 பேர் இந்தப் பட்டியலில் இணைந்ததாக போர்பஸ் தெரிவித்தது.

அப்படியென்றால், ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் சுமார் ஒரு பெருஞ்செல்வந்தர் உருவாகியுள்ளார்.

Sat, 04/10/2021 - 17:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை