மெக்சிகோ: சவப்பெட்டியில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்த வேட்பாளர்

மெக்சிகோவில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் சவப்பெட்டியிலிருந்து தமது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று, குற்றச்செயல் கும்பல்களின் வன்முறை ஆகியவற்றால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை எடுத்துக்காட்டும் வகையில் அவர் அவ்வாறு செய்தார்.

தங்க சவப்பெட்டி ஒன்றில் கார்லோஸ் மயோர்கா பிரசாரக் கூட்டத்திற்கு வந்தார். அரசியல்வாதிகளின் பொடுபோக்கால் மக்கள் மடிவதாக எடுத்துக்கூறுவது தமது நோக்கம் என்றார் அவர்.

வன்முறை, கொரோனா தொற்று ஆகியவை குறித்து அரசியல்வாதிகள் மௌனமாக இருந்துள்ளதாக அவர் கூறினார். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னை உயிருடன் புதையுங்கள் என்று ஆதரவாளர்கள் முன் அவர் கூறினார்.

வைரஸ் தொற்றால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 200,000ஐக் கடந்துள்ளது. மறுபுறம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு பின்னர் அங்கு 300,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக மெக்சிகோ அரசாங்க தரவு காட்டுகிறது.

மெக்சிகோவில் வரும் ஜூன் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இது அதிக வேட்பாளர்கள் கொல்லபட்ட தேர்தலாகவும் மாறியுள்ளது. இதுவரை இந்தத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Sat, 04/10/2021 - 19:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை