போலி கொரோனா தொற்று; மாணவர்கள் மீது நடவடிக்கை

பாடசாலை செல்வதைத் தவிர்க்க சுவிட்ஸர்லந்தின் பேசல் நகரைச் சேர்ந்த 3 மாணவர்கள், தங்களுக்கு கொவிட்–19 நோய்த்தொற்று இருப்பதாகப் பொய் கூறி மாட்டிக்கொண்டனர்.

தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கொவிட்–19 தடங்களைக் கண்டறியும் செயலியிலிருந்து தகவல் வந்துள்ளதாய் போலிக் குறுஞ்செய்திகளைக் காட்டி அவர்கள் பாடசாலையை ஏமாற்றினர்.

அதனால், அவர்களுடன் படிக்கும் சுமார் 25 மாணவர்கள் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த மாதம், வசந்தகால விடுமுறைக்கு முன் நடந்த அந்த ஏமாற்று வேலையால், சில ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர்.

அது சிறு பிள்ளைகளின் குறும்புச்செயல் அல்ல.

கடுமையான சம்பவம் என்று அந்தப் பாடசாலையின் பேச்சாளர் அந்நாட்டின் பிளிக் செய்தித்தாளிடம் கூறினார்.

அந்த மூவர் மீதும் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வர பாடசாலை திட்டமிடுகிறது.

எனினும், அவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சில அண்டை நாடுகளைப் போலன்றி சுவிட்சர்லாந்தில் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலும் பாடசாலைகள் திறக்கப்பட்டே இருந்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதி தொடக்கம் மே நடுப்பகுதி வரை எட்டு வாரங்கள் மாத்திரமே அங்கு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

Sat, 04/10/2021 - 15:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை