பருவநிலை மாற்றம்: நடவடிக்கை எடுக்க சீனா, அமெரிக்கா உறுதி

அமெரிக்காவும் சீனாவும் பல விவகாரங்களில் முரண்பட்டாலும், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை எடுக்க அந்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

அமெரிக்காவின் பருவநிலைத் தூதர் ஜோன் கெர்ரி, சீனா சென்றதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பருவநிலை மாற்றம் தொடர்பான நெருக்கடி உடனே தீர்க்கப்பட வேண்டிய கடுமையான பிரச்சினையாக உள்ளது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னர் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் புதிய கடப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் சீனாவும் வலியுறுத்தின.

கரியமில வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இருதரப்பும் கலந்துரையாடவுள்ளன.

வளரும் நாடுகள், கரியமில வாயுவைக் குறைவாக வெளியிடுவதற்கு ஏற்ற வளங்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்குரிய நிதியை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவும் சீனாவும் இணக்கம் தெரிவித்தன.

Mon, 04/19/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை