அஸ்ட்ராசெனக்கா முற்றாக நிறுத்தம்

கொரோனா தொற்றுக்கு எதிரான ஒக்போர்ட் – அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை முற்றிலும் நிறுத்த டென்மார்க் தீர்மானித்துள்ளது.

அவ்வாறு அந்தத் தடுப்புமருந்தின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த முடிவெடுத்திருக்கும் முதல் நாடாக அது உள்ளது.

அந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதால், அரிய இரத்த உறைவும் அதனால் மரணமும் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து டென்மார்க் இந்த முடிவை எடுத்துள்ளது.

இருப்பினும் அந்த மருந்துக்குத் தடை விதிக்க ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கவில்லை.

Fri, 04/16/2021 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை