சுயஸில் சிக்கிய கப்பல் பறிமுதல்

சுயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற சரக்குக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

எவர் கிவன் எனும் அந்த ஜப்பானியக் கப்பலின் உரிமையாளர்கள் 900 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தத் தவறியதால், கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக சுயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் கூறினார்.

கடந்த மாதம் 23ஆம் திகதியிலிருந்து சுமார் ஒரு வாரமாக தரைதட்டி நின்ற அந்தக் கப்பலை இழுவைப் படகுகள் வெற்றிகரமாக அப்புறப்படுத்தின.

மாபெரும் கப்பல் குறுக்கே நின்றதால், பல கப்பல்கள் கால்வாயைக் கடக்கமுடியாமல் சிக்கிக் கொண்டன. இதனால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நாள்தோறும் சுமார் 9.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள சரக்கு வழி மறிக்கப்பட்டது.

Fri, 04/16/2021 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை