இந்தோனேசிய எண்ணெய் சுத்திகரிப்பகத்தில் பாரிய தீ

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர்.

அரச எண்ணெய் நிறுவனத்தால் நடத்தப்படும் பலொகான் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை இந்தத் தீ ஏற்பட்டது.

குறைந்தது ஐவர் காயமடைந்திருப்பதோடு சுமார் 950 குடியிருப்பாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு சிலர் காணாமல்போயிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் கடும் மழை மற்றும் இடி மின்னலுக்கு மத்தியிலேயே தீ ஏற்பட்டதாக அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தெரிவித்தது.

நேற்றுக் காலையிலும் தீ எரிந்து கொண்டிருப்பது மற்றும் வானில் கரும்புகை சூழ்ந்திருக்கும் காட்சிகள் சமூக ஊடுகங்களில் வெளியாகி இருந்தன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து கிழக்காக 200 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பலொகான் சுத்திகரிப்பு நிலையம் குறைந்தது 340 ஹெக்டேர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்று 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்க முடியும்.

Tue, 03/30/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை